defence job vacancy
இந்த நிதியாண்டில் ஆண்டில் மட்டும் சுமார் 1,35000 காலிப்பணியிடங்கள் முப்படைகளில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதில் 46,000 அக்னிவீரர்களை பணியில் சேர்ப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆட்சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு ஜுலை 1ஆம் தேதி வரை, 1,35,891 காலிப்பணியிடங்கள் நாட்டின் முப்படைகளில் நிரப்பப்படமால் உள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பத் கூறியிருக்கிறார்.
Central Government jobs 2023
இந்திய ராணுவம் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று முடக்கத்தின் காரணமாக ஆட்சேர்ப்பு முகாமை நடத்தவில்லை. ஆனால் இயல்பு நிலை திரும்பிய பிறகும் இந்த ஆட்சேர்ப்பு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் மட்டும், இந்திய ராணுவத்தில் 97177 வீரர்கள் பணியிடங்களும், இந்திய விமானப்படையில் 4850 வீரர்கள் பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11166 வீரர்கள் பணியடங்களும் காலியாக இருந்தன.
Organisation: india Defence
Job Category: Central Government Jobs
No of Vacancies: 135000 +
Job Location: Across India
post office vacancy details
இந்திய ராணுவத்தில் 97177 Vacancy
விமானப்படையில் 4850 Vacancy
கடற்படையில் 11166 Vacancy
Total Vacancy 1,35,891 Vacancy
Various Departments in Central Government
Education Qualification
Govt Jobs Eligibility Details: Applicants should be completed the following education criteria below are the educational qualifications to look for employment as declared by the Post office Recruitment 2023 Candidates Should hold 10th/ 12th/ Degree from a recognized board. Candidates should Check Experience and Discipline at detailed Advertisement
Defence Recruitment 2023 in Tamil
இந்தியப் படையினருக்கு நாட்டின் எல்லைக் கோட்டு பகுதிகளில் மட்டும் அல்லாமல் நாட்டின் பல்வேறு முனைகளிலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, பாதுகாப்பு துறையில் பணியாளர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்வது மிக முக்கியமானது என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். இந்த சமயத்தில் தான், மத்திய அரசு முப்படைகளில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்க்கும் “அக்னிபத்” என்ற திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், 4 வருடங்களுக்கு மட்டும் வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். பணி காலம் முடிந்ததும், 25% வீரர்கள் மட்டும் நிரந்தர சேவைகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் இதர வீரர்கள் சேவா நிதி என்ற ஒரே தடவையிலான தொகுப்பு நிதி வழங்கப்பட்டு பணியில் இருந்து விலகுவார்கள் என்றும் தெரிவித்தது.
Defence News
வீரர்களின் பற்றாக்குறை குறித்து சதீஸ்கர் காங்கிரஸ் நாடளுமன்ற உறுப்பினர் தீபக் பாஜி கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய் பத், " வீரர்கள் மட்டத்தைப் பொறுத்த வரையில், இந்திய ராணுவத்தில் 1,18,485 இடங்களும், விமானப்படையில் 5819 பணியிடங்களும், இந்திய கடற்படையில் 11587 வீரர்கள் இடங்களும் காலியாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், இந்தாண்டு 46 ஆயிரம் அக்னிவீரர்களை பணியில் அமர்த்த உள்ளதாக அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும், ஆட்சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.