top of page

2023 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் 38000 ஆசிரியர்கள் நியமனம் Tacher jobs

Writer's picture: RajRaj
14000 Teacher Job Vacancy 2023 | TN TRB latest news 2023 in Tamil | tn govt jobs 2023
trb recruitment 2023

2023 ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் 38000 ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது. இது தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வுக்கு தயாராகும் நம்பர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் டி ஆர் பி ஆசிரியர் தேர்வு வாரியம் தவிர மத்திய அரசு மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.


Tamilnadu Teacher Recruitment 2023




இதனிடையே நாடு முழுவதும் 748 ஏகலைவா பள்ளிகளில் புதிதாக 38.800 ஆசிரியர்கள் பணியமைத்தர்ப்படுவார்கள் என மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பழங்குடியின மாணவர்களுக்கு தரமான கல்வியை போதிப்பதுடன், ஒட்டு மொத்த வளர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 24 மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக 15000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.


Organization: eklavya school Notification 2023

Job Category: Central Government Jobs

Total No of Vacancies: 38000

Job Location: india


Post Name and vacancy details:

  • School Teacher

  • PRT

  • TGT

  • PGT

tn jobs Eligibility Details:


Name of the Post Educational Qualifications

  • Degree / Diploma + B.Ed

Candidates should Check Experience and Discipline at detailed Advertisement


Vacancies in govt school to teach following sctudents


தமிழநாட்டை பொறுத்தவரை பின்வரும் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் வேலை என்று பார்க்கும் போது 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு படம் கற்பிக்க பிரைமரி டீச்சர், 6 முதல் எட்டு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்க ட்ரைன்னுடு கிராஜுவேட் டீச்சர், ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை பாடம் கற்பிக்க போஸ்ட் கிராஜுவேட் டீச்சர் தேவைப்படுவார்கள். எனவே வரும் கல்வியாண்டில் 38000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் வெளியாகவுள்ளது. இது தமிழ்நாட்டில் ஆசிரியர் வேலைக்கு தொடர்ச்சியாக முயற்சித்து வரும் அன்பர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் வெள்ளிமலை, சேலம் மாவட்டம் - அபிநவம் மற்றும் ஏற்காடு. நாமக்கல் மாவட்டம் செங்கரை, திருவண்ணாமலை மாவட்டம் - அத்திப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் - புதூர்நாடு, நீலகிரி மாவட்டம் - மு.பாலடா மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் - குமிழி ஆகிய இடங்களில் 8 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 2606 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நாடு முழுவதும் ஏகலைவா பள்ளிகளில் ஆசிரியர்கள் தட்டுப்பாடு நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இதை அமைக்க தற்போது 15000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.


மத்திய அரசின் தேசிய பழங்குடியினர் நல கல்விச்சங்கத்தின் கீழ் பழங்குடியினருக்காக 392 ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட பள்ளிகள் இந்தியா முழுவதும் செயல்பட்டு வருகிறன. இப்பள்ளிகளில் ஆங்கில வழியில் தரமான கல்வியும், ஊட்டச்சத்து மிக்க உணவும், விளையாட்டு மற்றும் கலாச்சார பிரிவுகளில் சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தப்பள்ளிகள் நாட்டில் உள்ள மலைப் பகுதிகள் மற்றும் வனப்பகுதிகளில் அமைக்கப்படுவதுடன் நாட்டின் தொலை தூரப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின குழந்தைகளுக்கு பெரிதும் பயனளிக்கும்.

bottom of page