Latest News Tamil

2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 5 வருடத்தில் இந்தியாவில் புதிதாக 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளையும், கூடுதலாக 30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தியும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Employment News Tamil:
கடந்த மார்ச் 1, 2020 வரையிலான நிதியாண்டில் மட்டும் சுமார் 8.72 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்கள் காலியாக இருந்திருக்கிறது. இதேபோல் இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் அரசு பணியிடங்கள் காலியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதா ?
பிப் 3 ராஜ்ய சபாவில் மத்திய அரசு சமர்ப்பித்துள்ள அறிக்கையின் படி மார்ச் 1, 2020 நிதியாண்டின் படி மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 8.72 லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால் எந்தத் துறையில் எவ்வளவு பணியிடங்கள் காலியாக இருக்கிறது என்பது சரியாக தெரிவிக்கவில்லை.
வேலைவாய்ப்பு செய்திகள்:
அதேசமயம் மார்ச் 1, 2019ல் மட்டும் 9,10,153 மத்திய அரசு பணியிடங்கள் காலியாக இருந்ததாகவும், அது மார்ச் 2020ல் 8,72,243 ஆகக் குறைந்துள்ளது. இது மார்ச் 2018ல் 6,83,823 ஆக இருந்தது என எழுத்து பூர்வமாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
Central Recruitment Board
பொதுவாக மத்திய அரசு தனது காலிப்பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மற்றும் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் (RRBs) ஆகிய அமைப்புகளின் மூலம் தேர்வு நடத்தி வருகிறது.
2018-19 முதல் 2020-21 நிதியாண்டில் மட்டும் இந்த 3 அமைப்புகள் நடத்திய பல்வேறு தேர்வுகளின் வாயிலாக சுமார் 2,65,468 ஊழியர்களைப் பணியில் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Hot News: 1 கோடிக்கும் அதிகமானோர் வெறும் 40000 ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு போராட்டம் இந்தியாவில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை இருப்பதை காட்டுவதாக சமூக மற்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.