top of page

ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு தமிழ் பரப்புரை கழகம் துவக்கம் | தமிழ் செய்திகள் cm stalin

600003

Tamil Nadu Government cm stalin has allocated Rs. 1 crore to develop the Tamil language in foreign and foreign states Latest News Tamil:

ரூ. 1 கோடி நிதி ஒதுக்கியது தமிழ்நாடு அரசு தமிழ் பரப்புரை கழகம் துவக்கம் | தமிழ் செய்திகள் cm stalin. Tamil Nadu Government has allocated Rs. 1 crore to develop the Tamil language in foreign and foreign states Latest News Tamil:
Latest News Tamil

‘தமிழ் பரப்புரை கழகம்’ உருவாக்க, ரூ.1 கோடி நிதி ஒதுக்கிடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது

Tamil Nadu Government:


சென்ற செப்டம்பர் மாதம் தமிழ்வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின் மீதான விவாதம் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்றது. இதில் “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பில் தெரிவித்தார். இதன்படி, அயல்நாடு, வெளி மாநிலங்களில் தமிழ்மொழியை கற்றுக்கொடுப்பதற்காக தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கென ரூ.1 கோடி நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


தமிழ் பரப்புரை கழகம் ஏன்?


இதன்முலம் தமிழ் கற்பிப்பதற்காக வசதியை ஏற்படுத்துவது, இணையத்தில் தமிழ் ஆசிரியர்கள் மூலம் கற்றுத் தருவது, தமிழை அயல்நாட்டு மற்றும் வெளிமாநிலங்களுக்கு கற்பிக்கும் அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குவது என கூறியிருந்தார். மேலும் அயல்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் தமிழ் மொழியை இரண்டாம் அல்லது மூன்றாம் மொழியாக கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவித்திருந்தார்.

தமிழ் செய்திகள்:


மேலும் இதற்கென தனியாக தேர்வுகளும் நடத்தப்பட்டு சான்றிதழ்களையும் வழங்கவுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

bottom of page