top of page

SBI ATM ல் பணத்தை எடுக்கும் விதி மாற்றப்பட்டது அனைவரும் அறியவேண்டிய முக்கியமான விஷயம்

600003

SBI's cash withdrawal policy has changed, and you must now follow this procedure in order to use an ATM to withdraw cash.


இந்த புதிய பண பரிவர்தனைப்படி, OTP மூலம், SBI வாடிக்கையாளர்கள் ATM ல் ரூபாய் 10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை எடுக்க முடியும். ATM ல் OTP யை மட்டும் உள்ளிடாமல், டெபிட் கார்டின் பின்னையும் உள்ளே உள்ளிட வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவும்.

தங்கள் வாடிக்கையாளர்களை பண மோசடியில் இருந்து பாதுகாக்க வைத்துக்கொள்ள புதிய தொழில்நுட்பத்தை ஸ்டேட் பேங்க் (SBI) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க பயன்படுத்தப்படும். இந்த புதிய தொழில்நுட்பம் ஒரு முறை கடவுச்சொல் OTP அதாவது ஏடிஎம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. SBI வங்கியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதை உள்ளிட்ட பிறகு தான் ATM மிலிருந்து பணம் வெளியே வரும். OTP என்பது 4 இலக்க எண்ணாகும், இது பயனரைச் சரிபார்க்கவும் பரிவர்த்தனைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒருவேளை இதுதவறாக இருந்தால் பணம் வராது. OTP மோசடியில் இருந்து பாதுகாக்க உதவும்.


SBI ATM Rules


OTP மூலம், ஏடிஎம்மில் இருந்து ரூ.10,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையை மட்டுமே SBI வாடிக்கையாளர்கள் எடுக்க முடியும். இந்தச் சேவை 2020 ஜனவரி 1 ஆம் தேதி முதல் SBI ATMகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாப்பதே தனது முன்னுரிமை என்று SBI தெரிவித்துள்ளது. OTP அடிப்படையிலான இந்த சேவை எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கே படித்திருப்பீர்கள்


SBI ATM ல் பணம் எடுக்க OTP தேவைப்படுகிறது.

  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP அனுப்பப்படும்.

  • OTP என்பது நான்கு இலக்க எண்ணாகும், அதில் இருந்து வாடிக்கையாளர் சரிபார்க்கப்பட்டு ஒரு பரிவர்த்தனைக்கு செல்லுபடியாகும்.

  • SBI ATM ல் எடுக்க வேண்டிய தொகையை உள்ளிட்டவுடன், அதே OTP திரை தோன்றும்.

  • இதற்குப் பிறகு, நீங்கள் ATM திரையில் OTP ஐ உள்ளிட வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு பணம் ATM லிருந்து வெளியே வரும்


Above Details Tells - How You Withdraw Cash from SBI ATM Through OTP

மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கியின் முயற்சி


இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மோசடிகளைத் தடுக்க, அனைத்து வங்கிகளும் ஏடிஎம்கள் மூலம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த முடிவு எடுத்துள்ளது. இங்ரஹ வசதி மூலம், அனைத்து வங்கிகள் மற்றும் ATM நெட்வொர்க்குகளில் UPI ஐப் பயன்படுத்தி கார்டு இல்லாமல் பணத்தை எடுக்கும் வசதியை எடுக்கும் வசதி கொண்டுவரப்படவுள்ளது. எல்லா வங்கிகளாலும் இந்தப் பரிவர்த்தனையை இப்போதே தொடங்க முடியவில்லை எனவும், ஆனால் வரும் மாதங்களில் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடும் எதிர்பாராத விதமாக வளர்ச்சி அடையும் எனவும் rbi கூறியுள்ளது.

bottom of page