top of page

UPI Money Transfer Facility For NRI | இனி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் UPI மூலம் பணம் அனுப்பலாம்

600003

NPCI Money Transfer Latest Update in Tamil

NRI Can Easily Pay Their Money From these 10 Countries to India by UPI From April 30 2023.

தமிழக விவசாயிகளுக்கு ரூபாய் 10,000 மானியம் | agriculture scheme 2023 in tamilnadu
agriculture scheme 2023 in tamilnadu

UPI For NRI in Tamil

Central Government latest announcement, இனி வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களும் UPI மூலம் பணம் செலுத்தலாம். இதோ முழு விபரம் காண்போம். இத்திட்டத்தின் கீழ் RUpay & UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை மேம்படுத்தும் வகையில் வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற பணமற்ற டிஜிட்டல் பரிவர்தனை என்பது இன்றைய காலகட்டத்தில் மக்களிடம் அதிகளவில் பிரபலமடைந்துள்ளது. நேரடியாக வங்கிகலுக்கோ அல்லது ஏடிஎம் வாசலிலோ கால்கடுக்க நிற்காமல் நொடியில் நம்முடைய பணத்தை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் சிறந்த வழியாக உள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை தளங்களான கூகுள் பே, போன் பே, என upi பரிமாற்றத்தின் மூலம் பணத்தை எளிதில் அனுப்பக்கூடிய வசதியை நாம் பெற்றிருக்கிறோம்.

Money Transfer in Tamil


இந்தியர்கள் பணத்தை எளிதில் பரிமாற்றக்கூடிய அதே வேளையில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பணத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்காக உள்ள NRI மூலம் இதுவரை மற்ற நாடுகளில் உள்ள இந்தியர்கள் இங்குள்ள அதாவது இந்தியாவில் உள்ள மொபைல் எண்ணை வைத்து UPI மூலம் பணத்தை பரிமாற்றம் செய்து வந்தனர். இந்த சமயத்தில் சூழ்நிலையில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களைப் உபயோகித்து விரைவில் upi மூலம் பண பரிவர்த்தனை செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Money Exchange in tamil


இதன், முதற்கட்டமாக பின்வரும் 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது upi சேவைகளைப் பயன்டுத்த உள்ளனர். குறிப்பாக இந்த அறிவிப்பின் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கெனடா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன், ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்பைப் பெறுவார்கள். இது சம்பந்தமாக NPCI வெளியிட்ட அறிவிப்பின் படி இத்திட்டத்தை வருகின்ற 2023 ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Money Transfer by UPI


இந்த அறிவிப்பின் மூலம் இனி வெளிநாடுகளில் பயிலும் மாணவர்கள், உள்ளூர் வர்த்தகம் மேற்கொள்ளும் பயனாளிகள், வெளிநாடுகளில் வாழும் இந்திய குடும்பங்கள் என அனைவருக்கும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் RUpay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மக்களிடையே கடந்த 6 ஆண்டுகளில், UPI மூலம் நடந்த பண பரிவர்த்தனை அபரிவிதமான வளர்ச்சி அடைந்துள்ளது எனவும், கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு பண பரிவர்தனை நடந்துள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளது. NRI பயனாளிகள் தங்கள் சர்வதேச சிம்முடன் இணைக்கப்பட்ட தங்கள் NRI மற்றும் NRO கணக்குகளை upi வுடன் இணைக்க வேண்டும், மேலும் மற்ற இந்திய UPI பயனர்களைப் போலவே வணிகர் கட்டணம் மற்றும் பியர் டு பியர் பேமெண்ட்டுகளுக்கு இதைப் பயன்படுத்த வேண்டும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செய்திகளை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.


This UPI Facility for financial, business and personal purposes.


தினசரி வேலைவாய்ப்பு தகவலை பெற Telegram குரூப்பில் சேருங்கள்


bottom of page