top of page

என்னது பிக்பாஸ் தமிழ் 7: பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், நடிகை ஸ்ரீ திவ்யா வரப்போறாங்களா ?

Writer's picture: RajRaj

என்னது பிக் பாஸ் தமிழ் 7: பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகர்கள் குமரன் மற்றும் ஸ்ரீ திவ்யா வரப்போறாங்களா? பிக் பாஸ் 7 தமிழன் வெளியீட்டு தேதியானது நெருங்கி வரும் சூழலில், சமூக ஊடகங்களில் போட்டியாளர்களின் வருகை பற்றிய கருத்துக்கள் பரவி வருகின்றன. வரும் Bigg Boss சீசனில் சீரியல் நடிகர் குமரன் தங்கராசன் & நடிகை ஸ்ரீ திவ்யா ஆகியோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிக்பாஸ் தமிழ் 7

பிக்பாஸ் தமிழ் 7 contestant


பிக்பாஸ் தமிழ் 7 நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமும் பெரும் ஆரவாரத்தோடு நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 1ஆம் தேதி பிரமாண்டமாக பிரீமியரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரீமியர் சோவுக்கு இன்னும் ஒன்பது (9) நாட்களே இருக்கும் சூழலில், பரபரப்பு எகிறி வருகிறது.


பிக் பாஸ் தமிழின் புதிய சீசனை காண ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளானர், வதந்தியான போட்டியாளர்களைப் பற்றிய தகவலை கண்டு பலரம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ் பெற்ற குமரன் தங்கராசன் போட்டியாளர்களில் ஒருவர் என கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஒரு முன்னணி தொலைக்காட்சி நடிகர் Bigg boss நிகழ்ச்சியில் இடம்பெறுவது வழக்கம். அந்த வகையில் விஜய் டிவியின் மிகமுக்கிய நாடகத்தில் முக்கிய கற்தபாத்திரத்தில் நடிக்கும் குமரனை இந்த சீசனுக்கு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், பிரபல நடிகை ஸ்ரீ திவ்யாவும் பிக் பாஸ் தமிழின் ஏழாவது பதிப்பில் ஒரு பகுதியாக இருப்பார் என்ற பலமான ஊக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது, இது நெட்டிசன்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


வரவிருக்கும் சீசனுக்கான விளம்பர வீடியோவில், தொகுப்பாளர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் காணப்படுகிறார், நிகழ்ச்சியின் வடிவத்தில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்பத்தை இது சுட்டிக்காட்டுகிறது.

சீசன் 7 பற்றிய சலசலப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் போட்டியாளர்களின் அதிகாரப்பூர்வ பட்டியலை நோக்கி எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த பட்டியல் விரைவில் கமல் ஹாசன் பிக் பாசின் பிரமாண்ட வெளியீட்டு விழாவில் வெளியிடுவார்.


பிக் பாஸ் தமிழ் 7 வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் தற்போது ராக்கெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரீமியர் காட்சிக்கு இன்னும் (9) ஒன்பது நாட்கள் தான் உள்ளது.

பிக் பாஸ் தமிழ் 7 பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு காத்திருங்கள் Bigg Boss பக்தர்களே!

bottom of page