top of page

கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு ? Village Assistant Result & Appointment Letter Issued

600003

5th Pass Village Assistant Jobs 2023

5th Pass | 2748 Village Assistant Jobs 2022 | Tamil Nadu | TN Jobs 2022 | Government Jobs 2022

Tamilnadu government issues an Appointment Letter for village assistants in taluk-wise Vacancies. but in recent days most of the candidates say this selection is not genuine. the following person is petitioned on the court. here we will see the vao village assistant result and case details. and see what is further action taken by selection officers.

VAO Assistant jobs 2023


தமிழ்நாட்டில் 2748 கிராம உதவியாளர்கள் தேர்வு நடைபெற்று அதற்கான பணியணைகள் வெளியாகி வந்த நிலையில் ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. கிராம உதவியாளர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் ரத்து செய்ய நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை எச்சரித்துள்ளது. கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் தலையாரி எனப்படும் கிராம உதவியாளர் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் மாவட்ட வாரியாக வெளியாகி வந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு மெரிட் லிஸ்ட்டில் பெயர் இல்லாதவர்களுக்கு பணி நியமனஆணை வழங்கப்பட்டு வருவதாகத் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.


Organisation: Village Assistant Recruitment 2022 - 2023

Job Category: Tamilnadu Government Jobs

No of Vacancies: 2748

Job Location: All over Tamil Nadu


Post Name & Vacancy Details:


Village Assistant: 2748 Posts


Education Qualification for tn govt jobs:


Tamilnadu VAO Office Assistant


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், கன்னிமார் கோட்டம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரி அம்மாள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கிராம உதவியாளர் தேர்வு தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். என் கணவரை 2014ஆம் ஆண்டில் இழந்துவிட்டேன். விளாத்திகுளம் பகுதியில் 17 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் சூரன்குடி பகுதி கிராம உதவியாளர் பணி பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் MBC வகுப்பைச் சேர்ந்த அருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நான் சூரன்குடி கிராமத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறேன். அருண்குமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் வசித்து வருகிறார்.


Selection Details

தலையாரி தேர்வில் உள்ளூர் தேர்வர்களைத் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது விதி. ஆகவே சட்ட விரோதமாக அருண்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே முறைகேடாகத் தேர்வு செய்யப்பட்டவரின் பணி நியமனத்தைத் ரத்து செய்ய வேண்டும். சூரன்குடி கிராம உதவியாளராக என்னைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.


நீதிபதி தண்டபாணி முன்பு இந்த மனு பிப்ரவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், சூரன்குடி கிராம உதவியாளர் பணி நியமனத்தில் இடஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்பட்டதா? என்று கேள்வி எழுப்பினார். பின்பு இதுகுறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருந்தால் சூரன்குடி கிராம உதவியாளர் பணி நியமனத்தை ரத்துசெய்ய நேரிடும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார். தற்போது இந்த தீர்ப்பு தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

bottom of page