இன்றைய முக்கிய செய்திகள்
நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் எந்த மரங்களை நடவேண்டும், நடக்கூடாது என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூலை 21ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
வரும் பருவமழைக்குள்ளாக சென்னையில் வடிகால் அமைக்கும் பணிகள் நிறைவடைய வாய்ப்பு இல்லை என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
latest news tamil:
150 ஆண்டுகள் பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் டவாலியாக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை. நீதிபதிகள் தனது அறையிலிருந்து நீதிமன்ற அறைக்கு வரும்போதும், மீண்டும் கோர்ட் ஹாலில் இருந்து சேம்பருக்கு திரும்பும் போதும், இத்தகைய தபேதார்கள் நீதிபதிகள் எளிதாக சென்று திரும்பும் வகையில் வழி ஏற்படுத்தி தருவதற்காக, நீதிபதிகளுக்கு சில அடிகள் முன்னர் இந்த செங்கோலை ஏந்தியபடி உஷ் என்று சத்தமிட்டபடி செல்வர்.
பழனி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சி அதிகாரிகள்மீது தாக்குதல் கடைக்காரர். பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்துள்ள பிரபாகரன் என்பவர் ஆக்கிரமிப்பு அகற்ற வந்த பழனி நகராட்சி இளநிலை உதவியாளர்கள் அய்யனார் மற்றும் லோகேஷ்வரன் ஆகியோரை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tamil news:
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகளை தூய்மைப்படுத்த தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்ய உயர்மட்ட குழு அமைத்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 102 புள்ளி 63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 94 புள்ளி 24ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற செய்திகளை பெற நமது www.latestnewstamil.com ஐ பின்தொடரவும்.