top of page

நடிகை சமந்தா மயோசிடிஸ் நோயால் அவதி. வெளியான அதிர்ச்சி தகவல்

600003

myositis samantha

7000 Postal Assistant, Post Office Jobs 2022 | SSC MTS Recruitment 2022 | Government jobs 2022
myositis samantha

கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை சமந்தா வெளியிட்ட புகை படத்தில் கையில் ட்ரிப்ஸ் ஏற்றியபடி மைக் முன் டப்பிங் கொடுத்துக் கொண்டிருந்தார். மயோசிடிஸ் எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக சமந்தா தெரிவித்த தகவல் வேகமாக பரவியது. இதை கண்டா ரசிகர்கள் தங்கள் ஆறுதலை சமந்தாவிற்கு தெரிவித்தனர். அதில் பலரும் சமந்தா சீக்கிரம் உடல்நலம் பெற்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என தெரிவித்தனர்.

samantha disease


மறுபக்கம் சமந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அதே நேரம் சமந்தாவை பாதித்து இருக்கும் மயோசிடிஸ் நோய் குறித்த தேடுதல் படலமும் இணையத்தில் அதிகரித்துள்ளது. மயோசிடிஸ் என்ற நோய் கேட்பதற்கு புதியதுபோல் இருந்தாலும் இது பல ஆண்டுகளாக நம் மக்களிடையே காணப்படும் நோய்தான். தசை அழற்சி நோயான இது, நமது நோய் எதிர்ப்பு சக்தியே தசையில் உள்ள செல்களை சிதைக்கிறது. ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினருக்கும் இந்த நோய் பொதுவாக வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.


Samantha myositis disease in tamil


இந்த நோய் ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கிறது என கூறப்படுகிறது. அனாலும் இந்த மயோசிடிஸ் நோய் வருவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக இது ஏற்படலாம் என கூறப்படுகிறது. ஆனால், ஆய்வுப்பூர்வ தகவல் இதுவரை கிடைக்கவில்லை. லட்சத்தில் 22 பேரை இந்த மயோசிடிஸ் தாக்கும் எனவும் இது உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது எனவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த நோயின் தாக்கம் மழை காலம் மற்றும் குளிர் காலங்களில் கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். தசை அழற்சி நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் தசை செல்கள் முற்றிலுமாக அழிந்து இயல்பு வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும்.

Samantha health Condition


இந்த நோயின் பாதிப்பால் தசை பலவீனமாகி உணவு உண்ணும் போது சுவாசக்குழாய்க்குள் போக வாய்ப்புள்ளது. இதனால் ஆஸ்பிரேசன் நிமோனியா ஏற்பட்டும் உயிரிழக்கும் அபாயமும் உள்ளதாக கூறப்படுகிறது. வெகு சிலருக்கு இதனால் புற்று நோயும் வரலாம். அதேசமயத்தில் ரத்த குழாயில் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் மயோசிடிஸ் நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், தசை வீக்கம், படுக்கையிலிருந்தும் அமர்ந்தும் எழுவதில் சிரமம், பசியின்மை, நடப்பதில் சிரமமாக இருக்கும் என்கின்றனர்.


மேலும் சாப்பிடும் போதும், தண்ணீர் குடிக்கும் போதும் சிரமம் ஏற்படும், இருமல், குரல் மாற்றம், தோலில் சிவப்பு தடிப்புகள், பேச்சில் சிரமம், மார்பில் சிவப்பு தடிப்புகள், தசை வலி போன்றவையும் ஏற்படும் என்கின்றனர். மயோசிடிஸ் நோய் குறித்து மக்களிடேயே அதிக விழிப்புணர்வு இல்லை. உடல்வலி என்று நினைத்து சாதாரணமாக இருந்துவிடுகிறார்கள். இதற்கு ஆரம்ப நிலையில் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இல்லையெனில் கடும் விளைவை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபோன்ற செய்திகளை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page