top of page
Writer's pictureRaj

ஆட்டோ, டிராக்டர் வாங்க அரசு மானியம் வேண்டுமா இதை படிங்க முழுசா | Government schemes in tamilnadu

Auto, Tractor and car வாங்க Government scheme Tamil Latest Update: ஆட்டோ, டாக்சி வாங்க மானியம் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது இதில் ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி, டிராக்டர் வாங்க 35 சதவீதம் மானியத்துடன் வெறும் 3% வட்டியில் கடனுதவி வழங்க படுகிறது. இதுவரை யாரும் கொடுக்காத சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.


ஆட்டோ, டிராக்டர் வாங்க அரசு மானியம் வேண்டுமா இதை படிங்க முழுசா | Government schemes in tamilnadu

இந்த மானியம் எஸ் சி / எஸ் டி பிரிவினருக்கு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விருப்பமுள்ள நபர்கள் குறைந்தபட்சம் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி / பட்டம் / பட்டய தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.


21 வயது அல்லது 21 வயதிற்கு மேல் உள்ள நபராக இருக்க வேண்டும். உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் அதாவது (பார்ட்னர்ஷிப்) அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.


Government Free scheme


தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த, மற்றும் முதல் தலைமுறை தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, ஒழுங்குபடுத்தி, ஊக்குவிக்கும் குறிக்கோளோடு இத்திட்டத்தினை 2012 முதல் 2013 முதல் செயல்படுத்தி வருகிறது. இந்த ஆலோசனைகள் முடிந்ததும் பட்ஜெட் அறிக்கை தயாரிப்பில் நிதித்துறை ஈடுபடும். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன், தமிழக நிர்வாகம் அமைச்சரவை கூட்டத்தை கூட்டும். நிதிச் சுருக்கம் மார்ச் முதல் வாரத்தில் அமைச்சரவை கூட்டத்தின் போது ஒப்புதல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின், மார்ச் மூன்றாவது வாரத்தில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பட்ஜெட் அறிக்கையை, சட்டசபையில் தாக்கல் செய்வார். வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறையின் பட்ஜெட்டை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

ஆட்டோ, டிராக்டர் வாங்க அரசு மானியம் அறிவிப்பு

Tamil Nadu Government scheme 2023


இத்திட்டத்தின் மூலம் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூபாய் 10 இலட்சத்துக்கு முதல் ரூபாய் 500 இலட்சம் வரை உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குக் கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10% வழங்கப்படுகிறது.


மானிய உச்ச வரம்பு ரூபாய் 75 இலட்சம். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 % வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. முதலீட்டாளர் பங்கு பொதுப்பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் செலுத்திடல் வேண்டும். இத்திட்டத்தின் கீழ், சேவைப் பிரிவில் மண் அள்ளும் இயந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிக் போரிங் வாகனம், ரெஃப்ரிஜரேட்டட் ட்ரக் போன்ற நகரும் அலகுகளுக்கு மட்டுமே இதுவரை இசைவளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


திட்டச்செயல்பாடு பற்றிய சீராய்வின் போது, இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தோர் பெருமளவு பயன் பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மேற்குறித்த பிரிவுகளைச் சார்ந்த விருப்பமுள்ள நபர்கள், பயணியர் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் திட்டங்களை அனுமதிக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.


தற்போது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி பெற்ற நபர்களிடமிருந்து மாவட்ட நிர்வாகம் விண்ணப்பங்களை கோருகிறது. இதன்படி தகுதி வாய்ந்த பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பேருந்து, மினிபஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி, ட்ரக், ட்ரைலெர் போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35 % தனி நபர் மானியமும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3 % வட்டி மானியமும் பெற்றுப்பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்டத்தொழில் மையத்தினை நேரடியாகவோ, அல்லது தொலைபேசி மூலமாகவோ அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுபோன்ற பயனுள்ள தகவலை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page