World Pharmacists Day 2023: அனைவரின் வாழ்க்கையிலும் சுகாதாரம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மருந்தாளுநர்கள் சரியான மருந்தின் அளவை சரிபார்க்க வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு மருந்துகள் கிடைப்பதை அவர்கள் உறுதிசெய்ய வேண்டும். ஒரு முக்கிய சமூக சேவையையும் இவர்கள் ஆற்றுகின்றனர்.
உலக மருந்தாளர்கள் தினம் 2023
மேலும் அனைவருக்கும் பாதுகாப்பான மருந்துகளை அணுகுவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய மகத்தான செயலை செய்யும் இவர்களுக்கு நீங்கள் உலக மருந்தாளர்கள் தினத்தில் ஒரு வாழ்த்து தெரிவிக்கலாம்.
மருந்தாளர்களை கௌரவிப்பதற்காக உலக மருந்தாளர்கள் தினம் கொண்டாடுகிறோம். மருத்துவத் துறை மற்றும் ஒட்டுமொத்த மருத்துவ முறையை மேம்படுத்துவதில் மருந்தாளுநர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
உலக மருந்தாளர்கள் தினத்தை கொண்டாடுவதற்கு முன் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
உலக மருந்தாளர்கள் நாள்
ஆண்டுதோறும் செப்டம்பர் 25ஆம் தேதி உலக மருந்தாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் திங்கட்கிழமை கொண்டாடுகிறோம்.
உலக மருந்தாளர்கள் தினத்தின் வரலாறு
சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) கவுன்சில் 2009ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் காங்கிரஸின் போது உலக மருந்தாளர்கள் தினத்தைக் கொண்டாடுவதாக முதன்முதலில் அறிவித்தது. அதே நாளில், 1912 இல், சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (எஃப்ஐபி) கவுன்சில் உருவாக்கப்பட்டது.
அப்போதிருந்து, செப்டம்பர் 25 அன்று உலக மருந்தாளர்கள் தினத்தை கொண்டாடி வருகிறோம். FIP உலக மருந்தாளர்கள் தினமானது.
மருந்தகத்திற்கு ஆதரவளிக்கும் சமூகங்களில் அதன் சாதனைகளைக் கொண்டாடுவததிலும். அதன் மதிப்பை மேம்படுத்துவதிலும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இது ஆற்றலை மேம்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்று சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) கவுன்சில் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
உலக மருந்தாளர்கள் தினத்தின் அவசியம்
இந்த நாளில், அனைவருக்கும் முறையான சுகாதார வசதிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் மருந்தாளர்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். உலகளாவிய ஆரோக்கியத்திற்கான அவர்களின் பங்களிப்பையும் சமூகத்தில் அவர்களின் மதிப்பையும் நாங்கள் அங்கீகரித்து மதிக்கிறோம். மருந்தாளர்களின் முயற்சிகளை அங்கீகரிப்பதும், அவர்கள் மக்களுக்கு செய்த சேவைக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த நாள் கொண்டாடபடுகிறது.