top of page

காதலியை பார்க்க கல்லூரிக்குள் பெண் போல் பர்தா வேடமணிந்து நுழைந்த இளைஞரால் பரபரப்பு

600003

Real Love Story: காதலியை பார்க்க கல்லூரிக்குள் பெண் போல பர்தா வேடமணிந்து நுழைந்த இளைஞரால் பரபரப்பு. இந்த நிகழ்வு கன்யாகுமரியில் நிகழ்ந்தேறியுள்ளது.



Boys meet lover


காதலியை சந்தித்து பேச பெண் போல பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் நுழைந்த இளைஞர் நுழைந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருகே குலசேகரம் என்ற இடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்லூரியின் அருகே பர்தா அணிந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் சுற்றி திரிவதை கல்லூரி காவலாளிகள் பார்த்துள்ளனர்.


பெண் போல பர்தா வேடமணிந்து நுழைந்த இளைஞரால் பரபரப்பு

Love Story


அவரை பிடித்து பர்தாவை விலக்கி பார்த்த போது இளைஞர் ஒருவர் பர்தா வேடமணிந்து கல்லூரிக்குள் வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலிஸ் அதிகாரிகள் இளைஞரிடம் விசாரித்ததில் கேரளாவை சேர்ந்த அந்த வாலிபர் என்பது தெரியவந்தது. அவர் தனது காதலியை நேரில் பார்த்து பேச பர்தா அணிந்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து அந்த வாலிபரை போலீஸ் அதிகாரிகள் எச்சரித்தனர். பின்பு அவரை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இதுபோன்ற பரபரப்பான செய்திகளை காண நமது மெய்த்தமிழன் சேனலுடன் இணைந்திருங்கள்.

bottom of page