Chennai Southern Railway Latest Update: தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு. ரயில்வே டிக்கெட் முன்பதிவில் மாற்றம்.
ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க அவசியம் இல்லை. இவ்வாறு காத்திருந்து முன்பதிவில்லா டிக்கெட் பெற வேண்டிய தேவையும் இல்லை. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தற்போது சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக, ரயில் நிலையங்களில் ஆட்டோமெட்டிக் டிக்கெட் வெண்டிங் மெஷின்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால்
Southern Railway
இந்த மிசின்களை ஆர் வாலெட் கார்டு இல்லாமல் பயன்படுத்த முடியாது. அதனைச் சரி செய்து இந்த ஆட்டோமெட்டிக் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் U P I அல்லது கிவ் ஆர் குறியீடு பயன்படுத்தி டிக்கெட் கட்டணத்தை புக் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதனால் இனி ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களில் டிக்கெட் புக் செய்ய போனில் உள்ள கூகுள் பே, போன் பே பொன்ற U P I செயலிகள் இருந்தால் போதுமானதாக இருக்கும். அதற்காக தெற்கு ரயில்வே கோட்டத்துக்கு உரிய முக்கிய ரயில் நிலையங்களில் 254 ஆட்டோஎட்டிக் டிக்கெட் விநியோகிக்கும் இயந்திரங்களைப் புதுப்பித்து U P I மற்றும் கிவ் ஆர் சேவையுடன் நிறுவ முடிவு எடுத்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு
Indian Railway
எனவே இனி ரயில் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற வேண்டிய அவசியம் இருக்காது. மேலும் முன்பதிவு இல்லா டிக்கெட்களை யூ டி எஸ் என்ற செயலி மூலமாகவும் புக் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற செய்திகளை பெற நமது மேய்த்தமிழன் சேனலை பின் தொடரவும்.