Layoffs News 2023: வேலையிழப்பு | சுமார் 2,00,000 ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு, அமெரிக்கா வாழ் இந்தியர்கள் நிலை என்ன ? வேலைக்காக போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை எதிரொலிக்கலாம் என அஞ்சப்படுகிறது. டிஜிட்டல் உலகில் ஜாம்பவானாக விளங்கி கூகுள் microsoft போன்ற உலகின் பெரு நிறுவனங்களின் ஆட்குறைப்பால் உலகமே தற்போது சம்பித்திருக்கிறது. இருப்பினும் இது தற்காலிகமானது தான் என் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு
கடந்த மூன்று மாதத்திற்குள் சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் வேலை இழந்துள்ள நிலையில், இதில் பெரும்பாலும் கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்களின் பெரும் பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க வாழ் இந்தியர்கள் தங்கள் பணி விசாவால் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளைத் தேட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
2023ல் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிநீக்கம் தொடர்வதால், பேஸ்புக் மற்றும் அமேசானைத் தொடர்ந்து layoffs அறிவித்த மூன்றாவது நிறுவனமாக மைக்ரோசாப்ட் உள்ளது.
Microsoft தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெல்லா இந்த மாத தொடக்கத்தில் தொழில்நுட்ப நிறுவனமான 10,000 ஊழியர்களை அல்லது சுமார் 5% ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படுபவர்கள் என்று அறிவித்தார். தொழில்நுட்ப நிறுவனமானது வருகின்ற பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன என கூறினார்.
சுமார் 2 லட்சம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்
Layoffs 2023
கடந்த 2022 நவம்பர் மாதம் முதல், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற உலகின் பெரு நிறுவனங்கள் தோராயமாக 200,000 ஐடி ஊழியர்களை வேலையிலிருந்து நிறுத்தியள்ளனர்.
மேலும் இவ்வாறு நீக்கப்பட்டவர்களில் 30 முதல் 40% வரை இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் என்வும், அவர்களில் பலர் H-1B மற்றும் L1 விசாக்களைப் மூலம் அமெரிக்காவில் பணிபுரிபவர்கள் என்றும் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.