top of page
  • 600003

வேலை இழந்தோருக்கான பண உதவி அளிக்கும் திட்டம் 2023 இது நல்ல இருக்கே | இந்தியாவில் சாத்தியமா ?

UAE Unemployment Insurance Scheme in Tamil: தற்போது இந்த திட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் திடீரென வேலை இழக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு புதிய காப்பீடு திட்டம் சமீபத்தில் அறிமுகமானது. மேலும் இந்த திட்டமானது வரும் ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

irctc train ticket booking new update


வேலைவாய்ப்பற்ற தொழிலாளர்களுக்கு பண உதவி


இந்த நிலையில் இத்திட்டம் பயன்பெற விருப்பமுள்ள நபர்கள், தனியார் துறை நிறுவனங்கள் அல்லது மத்திய அரசுத் துறைகளின் ஊழியர்கள் வேலையின்மை காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து மாதத்திற்கு 5 திர்ஹம்ஸ் முதல் சந்தா செலுத்தலாம். வேலை இழப்புக்கு எதிரான காப்பீட்டுத் திட்டம் தற்போது அவசியமாக உள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் இது கட்டயம் தேவைபடும் என்று மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.


இதை தொடர்ந்து 2023 ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இந்த காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் வேலையின்மை காப்பீடு திட்டத்தை அறிமுகபடுத்தியது.

இந்தத் திட்டத்தின் படி, அமைச்சகம் வரையறுத்துள்ள ஒழுங்கீனம் காரணமாக வேலையை இழக்கும் அல்லது தானாகவே முன்வந்து வேலையை விடும் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட காரணங்கள் இல்லாமல் மற்ற காரணங்களால் திடீரென வேலையை இழக்கும் தொழிலாளர்களுக்கு, ஒரு முறை அளிக்கப்படும் கோரிக்கைக்கு உயர்ந்த பட்சம் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மிகாமல் நிதியுதவி வழங்குகிறது.


சந்தா செலுத்தும் வழிகள்

  • காப்பீட்டுக் குழுவின் இணையதளம் (www.iloe.ae) மற்றும் ஸ்மார்ட் அப்ளிகேஷன்

  • வங்கி ATM மற்றும் கியோஸ்க் (kiosk) இயந்திரங்கள்

  • வணிக சேவை மையங்கள் (business service center)

  • பணம் பரிமாற்ற நிறுவனங்கள் (money exchange companies)

  • du மற்றும் Etisalat

  • SMS

UAE Approved இன்சூரன்ஸ் வழங்கக்கூடிய நிறுவனங்கள்


MoHRE இன் படி, ஒன்பது நிறுவனங்கள் இந்த இன்சூரன்ஸை வழங்குகின்றன.

  • துபாய் இன்சூரன்ஸ் நிறுவனம் (Dubai Insurance Company)

  • அபுதாபி நேஷனல் தக்காஃபுல் நிறுவனம் (Abu Dhabi National Takaful Company)

  • ஓமன் இன்சூரன்ஸ் நிறுவனம் (Oman Insurance Company)

  • அபுதாபி நேஷனல் இன்சூரன்ஸ் நிறுவனம் (Abu Dhabi National Insurance Company)

  • தேசிய பொது காப்பீட்டு நிறுவனம் (National General Insurance Company)

  • ஓரியண்ட் இன்சூரன்ஸ் (Orient Insurance)

  • ஓரியண்ட் UNB தக்காஃபுல் நிறுவனம் (Orient UNB Takaful Company)

  • அல் அயன் அஹ்லியா இன்சூரன்ஸ் நிறுவனம் (Al Ain Ahlia Insurance Company)

  • எமிரேட்ஸ் இன்சூரன்ஸ் நிறுவனம் (Emirates Insurance Company)

இழப்பீடு தொகையானது இரண்டு பிரிவுகளாக வகைபடுத்தப்பட்டுள்ளது. அவை:

காப்பீடு பெறுவதற்கான கோரிக்கைகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன?


Type 1: அடிப்படை சம்பளம் (basic salary) 16,000 திர்ஹம் மற்றும் அதற்கும் குறைவாக சம்பளம் வாங்கும் ஊழியர்கள் : காப்பீட்டு பிரீமியம்: மாதத்திற்கு 5 திர்ஹம்


மாதாந்திர இழப்பீடு: 10,000 திர்ஹமை விட அதிகமாக இருக்காது


Type 2: அடிப்படை சம்பளம் 16,000 திர்ஹம்ஸிற்கு மேல் வாங்கும் ஊழியர்கள்


மாதாந்திர இழப்பீடு: 20,000 திர்ஹம்ஸிற்கு மேல் இருக்காது


யார் விண்ணப்பிக்க இயலாது?


  • வேலை இழப்புக்கு ஏற்பட்ட காலத்திற்கு முந்தைய 12 மாதங்கள் வாங்கிய சம்பளத்தில் சராசரியாக 60 சதவீதம் மாதாந்திர இழப்பீடாக வழங்கப்படும்.

  • ஒரு முறை இந்த பயனை பெற கோரினால் அதிகபட்ச இழப்பீடாக தொடர்ந்து 3 மாதங்கள் வரை காப்பீட்டுத் தொகை பெறலாம்.

  • இழப்பீட்டுத் தொகையின் அதிகபட்ச காலம்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிபுரியும் அனைத்து காலகட்டங்களிலும், ஒரு பணியாளரின் இழப்பீட்டுக் காலம் 12 மாதங்களுக்கு மிகாமல் இருக்காது (பணியாளர் எத்தனை கோரிக்கைகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்).

இதுபோன்ற திட்டம் இந்தியாவிலும் அமலுக்கு வர வாய்ப்புள்ளது. எப்படி பேரிடர் காலங்களில் இலவசமாக மக்களுக்கு தொகை வழங்கப்பட்டதோ அதேபோல் பணியாளர்களுக்கு இவ்வாறு தொகை வழங்க வாய்ப்புள்ளது. ஆனால் அவர்கள் இதில் பயன்பெற மாதம் சிறு தொகை ப்ரீமியம் கட்ட வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு காப்பிட்டு நிறுவனங்கள் நினைத்தால் இது போன்ற நல்ல திட்டங்கள் வர வாய்ப்புள்ளது.

Comments


bottom of page