top of page
  • 600003

Education Loan in Tamil : கல்விக் கடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கவனம் | Government scheme

Education Scheme in Tamil: கல்விக் கடன் விண்ணப்பிக்கும் நபர்கள் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தெரிந்துகொள்வது முக்கியம். நீங்கள் வாங்கும் கடன் தொகைக்கு ஏதாவது பிணைகள் தேவைப்படுகிறதா என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் வித்யாலட்சுமி கல்வி கடன் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

Education Loan in Tamil : கல்விக் கடன் விண்ணப்பிக்கும் நபர்கள் கவனம் | Government scheme


கல்வி கடன் பெறுவது எப்படி


இன்று நாட்டில் கிடைக்கும் மிகவும் பிரபலமான கல்விக் கடன்களில் இதுவும் ஒன்றாகும். இதற்காக மத்திய அரசு வித்யாலட்சுமி கல்வி கடன் போர்டலானது, உயர் கல்வித் துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்தின் (IBA) நிதிச் சேவைத் துறையுடன் இணைக்கப்பட்டுள்லது. கல்விக் கடன் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு இடத்திலிருந்தும், இந்த போர்ட்டலை அணுகலாம். மேலும் இதன் மூலம் நீங்கள் எந்த வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம் மற்றும் கண்காணிக்கலாம். இந்த இணையதள பக்கம் தேசிய உதவித்தொகை போர்ட்டலுக்கான இணைப்புகளையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் நீங்கள் இந்தியாவில் படிக்க விரும்பினால் ரூபாய் 7.5 லட்சம் வரையும், வெளிநாட்டில் படிக்க விரும்பினால் ரூபாய் 15 லட்சம் வரையும் கடன் வழங்கப்பட்டு வருகிறது.


இதில் ரூபாய் 4 லட்சம் வரை வழங்கப்படும் கடன் தொகைக்கு பிணை அல்லது மார்ஜின் தேவையில்லை, ஆனால் வட்டி விகிதம் (PLR) கடன் விகிதங்களை தாண்டக்கூடாது. மேலும் இதில் 4 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வழங்கப்படும் கடன் தொகைக்கு வட்டி விகிதம் பிஎல்ஆர் மற்றும் 1 சதவீதத்தை தாண்டக்கூடாது. படிப்பு முடிந்தவுடன் ஒரு வருட கால அவகாசத்துடன் 5 முதல் 7 ஆண்டுக்குள் இந்த கல்வி கடன்கள் திருப்பிச் செலுத்த வேண்டும். உயர்கல்விக்காக தனிப்பட்ட கடன் பெரும் மாணவர்கள் திரும்பச் செலுத்தும் வட்டியில் 1961 இன் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80E கீழ் கழிக்கப்படலாம்.


கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் முழுவதுமாக படிக்க வேண்டும். அந்த தகவல்கள் உங்களுக்கு சரி என்றால் மட்டும் மேற்கொண்டு விஷயங்களை நீங்கள் செய்யவேண்டும். உயர்கல்விக்கான கடனில் வளர்ந்து வரும் இந்தியாவில் பெறுவது என்பது மிகவும் முக்கியமானதாகும். முக்கியமாக அது நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் மாணவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.


இந்தியாவில் தற்போது, கல்விக் கடனுக்கு ஒருவர் ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம். ஆனால் கடனுக்காக விண்ணப்பிக்கும் பெற்றோரும் மாணவர்களும் அறியவேண்டியது சில விஷயங்களும் உள்ளன.


கல்விக்கடன் மத்திய அரசு திட்டம் - வித்யலட்சுமி கடன் திட்டம்

முக்கிய அறிவிப்பு

நீங்கள் கடன் வாங்க திட்டமிட்டிருக்கும் குறிப்பிட்ட வங்கியானது, உங்கள் அதிகபட்ச கடன் தொகை கோரிக்கையுடன் ஒத்துப்போகிறதா என சரிபார்க்கவும். முடிந்தவரை மற்ற வங்கிகள் வழங்கும் கடன் தொகையை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம்.

  • திருப்பிச் செலுத்துவதற்கான வட்டி எவ்வளவு என்பதை கணக்கிடுட வேண்டும்.

  • கல்விகடனை திரும்ப செலுத்தும் காலத்தை கணக்கிட வேண்டும்.

  • படிப்பை முடித்த பிறகு திருப்பிச் செலுத்த ஓராண்டு கால அவகாசம் வழங்கப்படுகிறது.

  • நீங்கள் பெரும் கடன் தொகைக்கு பிணைகள் தேவையா என்பதை சரிபார்க்கவும்.

  • மார்ஜின் தொகை என்பது கல்விக் கடனைப் பெறும்போது மாணவர்களின் ஒரு சொந்த பங்களிப்பு தொகையாகும். எடுத்துக்காட்டாக, கல்வி பயில 4 லட்சம் ஆகிறது என்றால் அதில் 10 சதவீதத்தை நீங்கள் செலவிட வேண்டும். மீதமுள்ள 90% தொகையை கல்விக் கடனாக கடன் வழங்குபவர் பெறலாம்.

  • நீங்கள் படிக்க விரும்பும் பாடத்திட்டத்திற்கு கடனை வழங்கும் வங்கி தயாரா என்பதைச் சரிபார்க்கவும்.

留言


bottom of page