Train Booking Update in Tamil: சில ஆண்டுகளாக ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் வழிமுறையில், புதுப்புது மாற்றங்களை மத்திய ரயில்வே அமைச்சகம் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் IRCTC தங்கள் அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் தெரிவிப்பது வழக்கம்.
ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் மாற்றம்
நாட்டிலேயே பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும், போக்குவரத்து சேவைகளில் ஒன்று ரயில் பயணம். குறைந்த செலவில், பாதுகாப்பான மற்றும் சௌகர்யமான சேவை கிடைப்பதால் பெரும்பாலான பயணிகள் இதையே அதிகம் தேர்வு செய்கின்றனர். தற்போது முன்பதிவில்லா UnReservation / UR, பெட்டிகளில் பயணிகள் டிக்கெட் புக்கிங் செய்யும் நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன் ரயில்வே வாரியம் ஒரு தகவலை கூறியது அதன்படி, இனி பயணிகள் டிக்கெட்ட வாங்க டிக்கெட் கவுண்டர்களில் பலமணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை வராது. இதற்காக ஆன்லைன் டிக்கெட் புக்கிங் வசதியை IRCTC என்ற ஆன்லைன் ஆப் மூலம் பெறுவதற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஆப் வாயிலாக, பயணிகள் தங்கள் UR டிக்கெட்டை நீங்கள் பயணம் மேற்கொள்ள விருக்கும் ரயில் நிலையத்திற்கு 2 கிலோ மீட்டர் தூரம் இருக்கும் போதே, டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரயில் டிக்கெட் புக்கிங் முறையில் மாற்றம். புதிய நடைமுறை அறிவிப்பு!
வெளியான அறிவிப்பு
ஆனால், தற்போது இந்த தூரத்தை அதிகரித்து 5 கிலோமீட்டர் ஆக, ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துரையின் இந்த அறிவிப்பால், பயணிகள் அதிக தூரத்தில் இருந்து ஆன்லைன் வாயிலாக எளிதில் தங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதனால் பயணிகள் நேர இழப்பு, முழுவதும் தவிர்க்கப்படுகிறது.