unemployment government scheme in Tamil: வருடத்திற்கு ரூபாய் 7200 உதவித் தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. இந்த இலவச திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி பெற்றவர்களுக்கு உதவிதொகை வழங்கப்பட உள்ளது.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை
10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்களுக்கு மாதம் ரூபாய் 200 முதல் 300 வரையும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி அலல்து தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் 300 முதல் 400 வரையும், பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகளுக்கு மாதம் 600 ரூபாய் வரையும் உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
குடும்பத்தின் ஆண்டு வருமானம்: இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 72,000 மேல் இருக்கக் கூடாது. வருவாய் துறையில் இருந்து வருமானச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வருமான உச்ச வரம்பு இல்லை.
வயது உச்ச வரம்பு: ஆதிதிராவிட / பழங்குடியின விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. ஏனைய வகுப்பை சார்ந்தவர்கள் 40 வயது மிகாமல் இருக்கவேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ், பின்வருமாறு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மாதம் 200 ரூபாய்
10 ஆம் வகுப்பு தேர்ச்சி மாதம் 300 ரூபாய்
12 ஆம் வகுப்பு தேர்ச்சி மாதம் 400 ரூபாய்
பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டம் மாதம் 600 ரூபாய்
உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவே மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும்
பத்தாம் வகுப்பு தோல்வி மற்றும் தேர்ச்சிக்கு ரூ.600/-
மேல்நிலை கல்வி தேர்ச்சிக்கு ரூ.750/-
பட்டப்படிப்பு தேர்ச்சிக்கு ரூ.1000/- வீதம் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டு முழுமை அடைந்த வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு உதவித் தொகை
உதவித் தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது
எப்படி விண்ணப்பம் செய்வது?
உங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் இதற்கான விண்ணப்பபங்கள் வழங்கப்படுகிறது. தற்போது, சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் விண்ணப்பங்களை அளித்து வருகின்றன.
விண்ணப்பப் படிவம் Download Application From & Government Order
தேவையான ஆவணங்கள்
விண்ணப்பப் படிவம்
தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியின் கிளையில் சேமிப்புக் கணக்கைத் (Savings Bank account) pass book
TC மாற்று சான்றிதழ்
mark sheet மதிப்பெண் சான்றிதழ்
வருமான வரி சான்று
இருப்பிட சான்று
ஆதார் அட்டை நகல்
வேலைவாய்ப்பு அட்டை நகல்
யார் விண்ணப்பிக்க இயலாது?
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம். விவசாயம், சட்டம் போன்ற தொழிற் பட்டப் படிப்புகள் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை வழங்கப்படமாட்டாது.
வேலை வாய்ப்பின்மை: விண்ணப்பதாரர் எந்தவிதமான ஊதியம் பெறும் பணியில் அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டவராக அல்லது ஈடுபடுபவராக இருத்தல் கூடாது. மேலும் விண்ணப்பதாரர் தனியாரிடமிருந்தோ அல்லது அரசிடமிருந்தோ வேறு எந்த வகையிலும் எந்தவிதமான உதவித் தொகையும் பெறுபவராக இருக்க கூடாது.
உதவித்தொகை காலம் பெறுபவர்கள் வேலைக்கு சென்றாலோ அல்லது வேலை கிடைத்தாலோ உடனே உங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தெரியப்படுத்த வேண்டும். பணி நியமனம் பெற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்படும்.