ration shop tnpds latest news
தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இதற்கு தடை விதித்துள்ளதாக வெளியான அதிரடி உத்தரவு. தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் வழங்கி வருகின்றனர். ரேஷன் கடைகளில் முறைகேடுகளையும், தரமற்ற பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளார்.
tnpds news
இதன் படி இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதித்துள்ளது தெரியவந்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இச்சமயத்தில், திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் மற்றும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.
tnpds gov in news in tamil
மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடை சரியாகவும், தரமானதாகவும் வழங்கவில்லை என்றால் புகார் அளிக்க செல்போன் எண் தரப்பட்டுள்ளது. இந்த புகார் எண் பொதுமக்கள் பார்வைக்கு தெரியும் படி ரேஷன் கடைகளின் வெளியே நோட்டிஸ் ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. சமீபத்தில் இதுகுறித்து, தமிழக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். ரேஷன் கடைகளில் பொருட்கள் திருடு நடக்காமல் இருக்க இந்த உத்தரவு பிறக்கப்பட்டதாக தெரிகிறது. ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்குவதைத் தடுக்க இரவு நேரங்களில் பொருட்கள் இறக்க தடை விதிக்கப்படுவதாக முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
ration card news tamilnadu
ஒரு சில கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதாக தகவல் அளித்துள்ளதால் இதனைத் தடுக்கும் விதமாக பகல் நேரங்களில் மட்டுமே பொருட்கள் இறக்கப்படும் எனவும் அப்போதுதான் தரமற்ற பொருட்கள் இருந்தால் அதனை உடனடியாக மாற்ற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.