top of page

ரயில் நிலையத்தில் தினசரி வந்து செல்லும் ரயில்களை எண்ணும் வேலை Scam Railway Vacancy

600003

Indian Railway Vacancy

ரயில் நிலையத்தில் தினசரி வந்து செல்லும் ரயில்களை எண்ணும் வேலை Scam Railway Vacancy 2022
scam railway jobs

ரயில் நிலையத்தில் தினசரி வந்து செல்லும் ரயில்களை எண்ணும் வேலை. மாதம் நல்ல சம்பளம் கிடைக்கும் என கூறி 2 புள்ளி 6 கோடி ரூபாயை ஆட்டையை போட்ட வட மாநில கும்பல். தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்கள் ஏமாற்றம் அடைந்ததாக புகார். தமிழகத்தைச் சேர்ந்த 25 இளைஞர்களிடம் ரயிலில் டிக்கெட் பரிசோதகர்கள் வேலை வாங்கித் தருவதாகவும், கிளார்க் பணி வாங்கித் தருவதாகவும் கூறி லட்சக்கணக்கில் ஒரு கும்பல் பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வேயில் வேலைசெய்து ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த எம் சுப்புசாமி என்பவர் தான் முதலில் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி டெல்லியில் ரயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அவரும் ஏமாற்றப்பட்டுள்ள விவரம் தெரிந்தபின் இந்த விவகாரம் வெளியே தெரிந்தது.

Railway Jobs


கடந்த நவம்பர் மாதம் இது தொடர்பாக சுப்புசாமி புகார் அளித்ததைத் தொடர்ந்து ரயில்வே போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இதை பொருளாதாரக் குற்றப்பிரிவுக்கு மாற்றினர். அந்தப் புகாரில் “ ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவராமன் என்பவரைச் சந்தித்தாகவும், அவருக்கு டெல்லியில் எம் பிக்கள், அமைச்சர்கள் நன்கு பழக்கம் எனவும் கூறியிருக்கிறார். பின்பு இளைஞர்களுக்கு வேலைவாங்கித் தருவதாகத் கூறியிருக்கிறார். அதை நம்பி பணம் கொடுத்தோம்” என பாதிக்கப்பட்ட சுப்புசாமி அந்த புகாரில் கூறியிருக்கிறார்.


Railway Recruitment


சிவராமன் என்பவரும் அவரின் உதவியாளர்களும் வடக்கு ரயில்வேயில் பணியாற்றுவதாகக் கூறிக்கொண்டு, ஒவ்வொரு இளைஞரிடமும் ரூபாய் 33 லட்சம் பெற்று ஏமாற்றியுள்ளனர். இதில் பணத்தை பறிகொடுத்த சதீஸ் என்ற இளைஞருக்கு ஒரு மாதம் டெல்லியில் பயிற்சிதருவதாக கூறி அழைக்கப்பட்டிருந்தார். இதில் டெல்லியில் ரயில்நிலையத்தில் தினசரி எத்தனை ரயில்கள் வந்து செல்கின்றன என்று தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் சதீஸ் என்பவருக்கு கணக்கெடுக்கும் பயிற்சியை மோசடி கும்பலைச் சேர்ந்த விகாஸ் ரானா என்பவர் அளித்துள்ளார். ஒரு மாதம் இந்த பயிற்சிக்கு பின், சதீஸுக்கு போலியாக சான்றிதழையும் விகாஸ் ராணா வழங்கியுள்ளார் என்று போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

news tamilnadu


தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு இளைஞனரோ 27 லட்சத்தை பறிகொடுத்துள்ளார், அவருக்கும் டெல்லியில் போலியான பயிற்சியும், சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலையும், சான்றிதழும் தருவதாக செய்தி கேட்டு, அந்த இளைஞர்களின் நண்பர்களும் அதை நம்பி 25 பேர் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். கடைசியில் உண்மை அறிந்து மோசடி கும்பலைத் தொடர்பு கொள்ள முயன்றனர். அதை அறிந்த மோசடி கும்பல் செல்போன் அழைப்பை எடுக்கவில்லை. இதையடுத்து ஏமாற்றப்பட்டுவிட்டோம், கடினமாக சேர்த்த பணத்தை இழந்துவிட்டோம் எனக் கூறி போலீஸில் புகார் கொடுத்தனர். இதையடுத்து, மோசடி மற்றும் ஏமாற்றுதல் பிரிவில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுபோன்ற செய்திகளை பெற நமது மெய் தமிழன் சேனலை பின்தொடரவும்.

bottom of page