Loan Scheme in Tamil: பெண்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது மத்திய அரசு. சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்த ஒரு சூப்பர் திட்டம் அறிமுகம். மத்திய-மாநில அரசுகள் பெண்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது (NEW SWARNIMA SCHEME FOR WOMEN) என்ற திட்டத்தின் கீழ் பெண்களுக்கான புதிய பொற்கால திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது. இது சிறு வணிகம் செய்ய விரும்பும் பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குகிறது.
பெண்களுக்கான பொற்கால திட்டம் - கடன் பெறுவது எப்படி
பெண்களுக்கான பொற்கால திட்டத்தின் மூலம் பெண்கள் ரூபாய் 2 லட்சம் வரை கடன் தொகை பெறலாம். அதுவும் ஒரு வருடத்திற்கு 5% வட்டி என்ற விகிதத்தில் அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பெண்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மேலும், இந்த கடன் திட்டத்தில் நீங்கள் கேட்கும் முழு தொகையும் உங்களுக்கு கடனாக அளிக்கப்படும், அதிகபட்சம் 2 லட்சம் வரை வழஙகப்படும். பயனாளிகள் சார்பாக எந்தவித மார்ஜின் தொகையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பயனாளியின் பங்களிப்பு தேர்வையில்லை.
இந்த திட்டம் மற்ற திட்டங்களின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட மிக மிகவும் குறைவு. அதேபோல், 3 முதல் 8 ஆண்டுகள் வரை கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
தேவையான ஆவணங்கள்
சாதிச் சான்றிதழ்
வருமான சான்றிதழ்
குடும்ப அட்டை
சிறு வணிகம் செய்வதற்கான திட்ட அறிக்கை
இதர வங்கி கோரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
பெண்களுக்கான புதிய பொற்கால திட்டம் - 2 லட்சம் வரை கடன் தொகை - 5 % வட்டி
கடனுக்கு எப்படி விண்ணப்பிப்பது?
அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அல்லது மண்டல மேலாளர் அல்லது அனைத்து மாவட்டங்களில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் / நகர கூட்டுறவு வங்கிகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளின் அலுவலரை தொடர்பு கொண்டு மேலும் இந்த திட்டத்தின் விவரங்களை கோரலாம். விண்ணப்பிக்கும் படிவம் மற்றும் விதிமுறைகளை அவர்கள் எடுத்துரைப்பார்கள். விருப்பமுள்ள பெண்கள் மேற்குறிய அலுவலர்களை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கவும்.